பெயில் வகைகள்

Please fill-up the form below. Pay Rs. 2,000/- (USD 50) as registration fee

for consultation with Senior Lawyer.

Click for  CONTACT FORM

இப்போது எந்த மாதிரியான பெயில் உத்தரவுகள் இருக்கிறது என பார்ப்போம். ஒரு நபர் ஐ கைதானப்பிறகு நீதிமன்றத்தில் நான் இந்த வழக்கில் எந்தவித தவறும் செய்யவில்லை அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கொடுக்கிறது பெயில் பெட்டிஷன். தான் கைதான பிறகு கொடுக்கிற பெயில் பெட்டிஷன். கைது பண்ணுவதற்கு முன்பே நீதிமன்றத்தில் ஒரு பெட்டிஷன் போட்டு என் மீது ஒரு பொய்யான வழக்கு தாக்கலாயிருக்கிறது அந்த வழக்கில் என்னை தவறாக காவல்துறையினர் கைது செய்துவிடலாம் என்று நான் பயப்படுகிறேன்

அதனால் இந்த மனுவை நான் உங்களிடம் கொடுக்கிறேன் இந்த மனு மூலமாய் எந்த சூழ்நிலையிலும் இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைது செய்ய கூடாது அப்படி கைது செய்துவிட்டால் எனக்கு மிகப்பெரிய மானநஷ்டம் பிற நஷ்டங்களெல்லாம் ஏற்படும். அதனால் காவல் துறையினர் இந்த வழக்கில் என்னை கைது செய்யக்கூடாது என்று கொடுக்கிற மனுவின் பெயர் முன்ஜாமீன் மனு எனப்படும் .

Anticipatory Bail Application

ஆங்கிலத்தில் Anticipatory Bail Application என்று சொல்கிறோம். இந்த மாதிரி கைது செய்வதற்கு முன்பே ஒரு மனுவினை நீதிமன்றத்துக்கு கொடுத்து என்னை கைது செய்யக்கூடாது அப்படி கைது செய்துவிட்டால் என்னை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று அந்த பெட்டிஷன் நீதிமன்றத்தில் தாக்கலாகும்போது அது விசாரணைக்கு வரும்.

அது சம்பந்தமாக காவல்துறையை அழைத்து நீதிமன்றம் விசாரிக்கும் இந்த மாதிரி வழக்கு இருக்கிறதா இந்த நபர் மீது, இந்த மாதிரி பெட்டிஷன் கொடுத்திருக்கிறார் என்று காவல்துறையினரை நீதிமன்றம் விசாரிக்கும். அந்த நபர் கைது செய்யப்படக்கூடாது என்ற சட்ட முகாந்திரம் இருக்கிறபோது நீதிமன்றம் முன்ஜாமீன் மனு கொடுத்த நபர் அந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடாது அப்படி கைதுசெய்துவிட்டால் முன்ஜாமீன் படி அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுப்பார்கள்.

உத்தரவு கிடைத்த பிறகு எந்த நீதிமன்ற எல்லைக்குள் அந்த வழக்கு தாக்கலாயிருக்கோ அந்த நீதிமன்ற நடுவர் Jurisdiction of Magistrate கோர்ட்க்கு போய் இரண்டு தனிநபர் உத்தருவாதம் நீதிமன்றத்தில் கொடுப்பதன் மூலமாக இல்ல நீதிமன்றம் வேறு என்ன நிபந்தனைகளை கொடுத்திருக்கோ அந்த நிபந்தனைகள் படி நாம் கோர்ட்டிற்கு எல்லா டாக்குமெண்ட்ஸ் எழுதி கொடுக்கிறபொழுது நமக்கு பெயில் ஆர்டர் கொடுத்துவிடுவார்கள். இதேபோல் முன்ஜாமீன் உத்தரவு கிடைத்த நபர் அந்த வழக்கில் கைதாகமாட்டார்.

Anticipatory Bail என்கிற ஒரு விஷயம் குற்றவியல் விசாரணை சட்டத்தில் கைதாகாமல் பொய்வழக்கிலிருந்து கைதாகாமல் இருக்கிற ஒரு மிகப்பெரிய விஷயம்.

https://www.youtube.com/watch?v=MIzvKLIkJPo

Like Us on Facebook

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest