மோட்டார் வாகன விபத்து குறித்து சட்டம்
Please fill-up the form below. Pay Rs. 2,000/- (USD 50) as registration fee
for consultation with Senior Lawyer.
Click for CONTACT FORM
அதன் பிறகு சட்டம் என்ன சொல்கிறது என்றால் இந்த மாதிரி ஆம்புலன்ஸில் எடுத்துட்டு போவது, அரசு மருத்துவமணையில் சேர்த்தார்கள் என்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் அரசு மருத்துவமனையில் அவரகள் கொடுக்கிற ஆவணங்களில் கையொப்பமிட்டுவிட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டு செல்லலாம். விபத்தை ஏற்படுத்திய நபர்மீது போக்குவரத்து காவல் துறையினர் கேஸ் ஏதேனும் பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் அந்த விபத்தின் தன்மையே பொறுத்து தகுந்த சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்படும்.
criminal case
அது குற்றவியல் வழக்கு (Criminal case). எல்லோரும் கிரிமினல் கேஸ் என்ற உடனே கைதி செய்துவிடுவார்கள் உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று யாரும் பதட்டமடைய தேவையில்லை. விபத்தின் தன்மை என்ன இருக்கோ அதை பொறுத்துதான் வழக்கு அமையும். இந்த மாதிரியான விஷயங்களில் கிரிமினல் கேஸ் போலீஸ் பதிவு செய்திருந்தால் குற்றத்தின் தன்மையை பொறுத்து சம்பத்தப்பட்ட காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் தொடர்ந்து விசாரணைக்கு நான் ஆஜர் ஆவேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை எழுதி கொடுத்து பெயில் பாண்ட் என்ற படிவத்தில் எழுதிக்கொடுத்து கையொப்பம் இட்டுவிட்டு விபத்தை ஏற்படுத்திய நபர் மீது சட்ட நடவடிக்கைக்கு நான் ஆளாவேன் ,எந்த விதத்திலும் சட்டத்தின் பிடியிலுருந்து தப்பமாட்டேன் என்று உறுதிமொழி கையொப்பம் செய்வதின் பேரில் சம்பந்தப் பட்ட நபர் கைதுசெய்யப்பட மாட்டார், கைது செய்யப்பட்டிருந்தாலும் பிணையில் அவரை விடுவித்துவிடுவார்கள்.
இது சட்டத்தில் இருக்கிற ஒரு விஷயம் அதற்குப் பிறகு கிரிமினல் கேஸ் கோர்ட்டில் நடக்கும் அந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் சாட்டப்பட்ட நபர் தாவரளித்தார்கள் என்று சொன்னால் அவருக்கு உரிய தண்டனை என்ன இருக்கோ அதை நீதிமன்றம் நிச்சயமாக கொடுக்கும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்ட நபரோ அவரை சார்ந்த உறவினர்களோ நண்பர்களோ யாரும் கோபமடைந்து விபத்தை ஏற்படுத்திய நபர் மீது எந்த விதத்திலும் வன்முறையில் ஈடுபட கூடாது அதற்கு சட்டத்தில் இடமில்லை. அதற்க்கு பிறகு பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு பெறுவதற்காக காப்பீடு நிறுவங்கள் மீது பாதிக்கபட்ட நபரோ அல்லது அவருடைய உறவினர்களோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு பெறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கு இது சிவில் கேஸ். ஆக ஒரு மோட்டார் வாகன விபத்து நடந்தால் ஒரு கிரிமினல் கேஸ் ஓன்று இருக்கும் அது தனி ஒரு சிவில் கேஸ் ஒன்று இழப்பீடு பெறுவதற்காக நாடக்கும் அது தனி. இந்த இரண்டு வித்யாசத்தையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
Reviews
Submit your review | |
காவல்துறை வாகனம் மோதி நேரிட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தால், அந்த வழக்கு முடிய எத்தனை வருடங்கள் ஆகும்?
Good