குடும்ப நீதிமன்ற விசாரணை முறை
Please fill-up the form below. Pay Rs. 2,000/- (USD 50) as registration fee
for consultation with Senior Lawyer.
Click for CONTACT FORM
குடும்ப நீதிமன்றத்தில் என்ன மாதிரியான வழக்கு விசாரணை முறை நடைபெறும் என்று பார்ப்போம். Family Court என்று சொல்லுகிற குடும்ப நீதிமன்றம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டத்திலும் இப்போ இருக்கு சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கூட குடும்ப நீதிமன்றம் ஆரம்பித்து உள்ளனர். மற்ற நீதிமன்றத்திற்கும் குடும்ப நீதிமன்றத்திற்கும்என்ன வித்யாசம் அப்படியென்றால் குடும்ப நீதிமன்றத்தில் ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட கணவன் மனைவி பிரச்னை குழந்தை கஸ்டடி யாரிடம் இருக்கிறது என்கிற பிரச்னை மனைவிக்கு ஜீவனாம்சம் பெறுவதற்கான பிரச்சனை உட்பட எல்லா விவகாரத்து பிரச்சனைகள் குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் நாம் குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரமுடியும். குடும்ப நீதிமன்றம் என்று சொல்லும்போது இதில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை வருமா என்று கேட்டால் குடும்ப நீதிமன்றத்தில் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிச்சயமாக வராது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒரு குடும்பத்திற்குள் சகோதர சகோதரிக்குள் அப்பா மகன் ஒரு குடும்பம் என்றாலும் அந்த மாதிரியான சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சிவில் நீதிமன்றங்களில் தான் தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டுவரமுடியும் தவிர நிச்சயமாக குடும்ப நீதிமன்றத்தில் கணவன், மனைவி, குழந்தைகள், ஜீவனாம்சம், விவாகரத்து, திருமண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றி மட்டுமே விசாரணைக்கு எடுத்துப்பார்கள்.
First Stage
இந்த மாறி ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் முதலில் என்ன ஸ்டேஜ் என்று கேட்டால் First Stage குடும்ப கோர்ட்டில் என்னவென்றால் சம்மன் என்று சொல்லுகிற அழைப்பாணை எதிர்தரப்பினருக்கு நீதிமன்றத்தில் இருந்து வந்த பிறகு அந்த சம்மனில் எந்த தேதியில் வழக்கு விசாரணை நடைபெறும் எந்த நீதிமன்றத்தில் என்கிற விவரம் அதில் சொல்லிருப்பார்கள். அந்த வாய்தா தேதியில் நீதிமன்றத்தில் எதிர்தரப்பினர் கணவன் மனைவி மீது தாக்கல் செய்திருந்தால் இல்லை மனைவி கணவன் மீது தாக்கல் செய்திருந்தால் அந்த எதிர்தரப்பினர் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிற முதல் நாள் முதல் வாய்தாவில் நீதிமன்றம் அவங்க இரண்டு பேரயும் எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும் இரண்டு பேரும் நீங்க கவுன்சிலிங்கிற்கு போங்க என்று சொல்வார்கள்.
Family Courts Act
கவுன்சிலிங் என்று சொல்லப்படுவது Family Courts Act என்று சொல்கிற குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் படி கணவன் மனைவி பிரச்சனைகள் அனைத்தும் முதலில் குடும்ப நல ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகு அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே வழக்கு விசாரணை சட்ட ரீதியாக விசாரணை செய்யப்படும் என்று சட்டத்தில் சொல்லபடுகிறது. அதுனால எல்லா குடும்ப நீதிமன்ற வழக்குகளிலும் முதல் வாய்தாவில் நீதிமன்றம் இரண்டு தரப்பினரும் ஆஜராகிற போது நீங்க நீதிமன்றத்துக்கு உள்ளே இருக்கிற வளாகத்துக்குள்ளே இருக்கிற ஆலோசனை அறை குடும்ப நல ஆலோசனை அறைக்கு போய் அங்கு ஆலோசனை செய்வதற்கு சில தனிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நபர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசனைக்கு இரண்டு பேரையும் நீதிமன்றம் அனுப்பும். அந்த ஆலோசனை அறைக்கு தனியாகவோ இரண்டு பேரையும் சேர்த்து வைத்தோ அந்த ஆலோசகர் அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கு என்று விசாரித்து அதற்கு தகுந்த ஆலோசனைகள் கொடுப்பார்கள். அந்த ஆலோசனைகளை எடுத்துக்கலாம் அல்லது இந்த ஆலோசனைகள் எனக்கு வேண்டியதில்லை நான் வழக்கில் என்ன தாக்கல் செய்திருக்கிறேனோ அதன் படி வழக்கு விசாரணையே நான் செய்ய நான் விரும்புகிறேன் என்று சொல்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை இருக்கு.
கவுன்சிலிங்
இந்த கவுன்சிலிங் எனப்படுவது சட்டத்தின் படி அனைவரும் உட்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும் அந்த கவுன்சிலிங் நிலையில் அந்த ஆலோசகர் சொல்லுகிற விஷயங்களை கண்டிப்பாக அதையே எடுத்துக்கவேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் சொல்லுகிற விஷயங்களை நல்லதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொண்டு இருதரப்பினரும் மனம் ஒத்து சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பிருந்தால் சேர்ந்து வாழ்வதற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிற ஒரு அமைப்பாகத்தான் இந்த கவுன்சிலிங் ஸ்டேஜ் இருக்கு. அதே மாதிரி முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் இந்த கவுன்சிலிங் ஸ்டேஜ் பொறுத்த வரைக்கும் என்ன கவுன்சிலர் கிட்ட சொன்னாலும் இல்லை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிருயிருந்தாலும் அது நீதி மன்றத்தில் பதிவாகாது அது ரெகார்ட் ஆகாது அந்த நாளைக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கவுன்சிலிங்கில் இந்த மாதிரி சொன்னீர்கள் என்று யாரும் கேட்க முடியாது அது பதிவும் செய்யமாட்டார்கள் அதனால் கவுன்சிலிங்கில் மனம்விட்டு இரு நபர்களும் பேசுவதற்கு அந்த பிரச்னை தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அது அமைகிறது.
Reviews
Submit your review | |
This article is really an Educative Article - No doubt.
In reality - it's always one sided and forcing their decisions upon the women without even listening (NOT HEARING) their grievances, problems, difficulties, opinions, etc,.
I have more than 20 (twenty) hearing experiences in all fora of conciliation (by whatever term similar to it).