காவல் நிலையமோ நீதிமன்றமோ செல்ல தயக்கம் வேண்டாம்
Please fill-up the form below. Pay Rs. 2,000/- (USD 50) as registration fee
for consultation with Senior Lawyer.
Click for CONTACT FORM
கோர்ட்டுக்கு போலீஸ்டேஷனுக்கு போகிறதெல்லாம் தவறானகாரியமா, நிறைய பேர் எங்களை கோர்ட் படி ஏற வெச்சுட்டாங்க எங்களை போலீஸ் ஸ்டேஷன் வர வெச்சுட்டாங்க அப்படியென்று கோர்ட்டுக்கு போலீஸ்டேஷன்க்கு போவது தவறான செயல் மாதிரியும் அது போக கூடாத இடங்கள் மாதிரியும் சித்தரிக்குரதை நாம் கேள்விப்பட்டிருப்போம் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் எதற்காக இருக்கு உண்மையிலேயே நமக்கு சட்டத்தில் சில முக்கியமான அடிப்படையான உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கு. அந்த உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறபோது அந்த உரிமைகள் மீறப்படுகிறபோது யாரேனும் நமக்கெதிரா ஏதேனும் தீங்களித்தால் நமது பொருட்களை களவாடிவிட்டால் நாம் காவல் நிலையத்திற்கு போய் தான் புகார் கொடுக்கவேண்டும் அதுதான் சட்டம் சொல்கிறது.
அதேமாதிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அந்த காவல் நிலையத்தில் மேல் நீதி மன்றத்தில் புகார் கொடுக்க வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. ஆக நீதிமன்றத்தில் புகார் கொடுப்பதோ இல்லை காவல் நிலையத்திற்கு சென்று கொடுப்பதோ எந்த விதத்திலும் தவறான காரியமாக இருக்கமுடியாது. இன்னொரு விஷயம் சாதாரணமா பல பேர் சொல்றதை கேள்விப்பட்டிருப்போம் எங்களை கோர்ட்டில் கூண்டேர வைத்துவிட்டார்கள் அப்படியென்று, அது நீதிமன்ற நடைமுறை பற்றி சரியாக புரிதல் இல்லாததினால் சொல்கிற வாசகம்.
குற்றம் சாட்டப் பெற்றவர் நிறுத்தப் படுகின்ற கூண்டு
நீதி மன்றத்தில் இரண்டு கூண்டுகள் இருக்கிறது ஒன்று சாட்சி கூண்டு மற்றொன்று குற்றவாளி கூண்டு (குற்றம் சாட்டப் பெற்றவர் நிறுத்தப் படுகின்ற கூண்டு) குற்றம் சாட்டப் பெற்றவர் விசாரணையின் போது நிறுத்தவைக்கப் படுகின்ற கூண்டு தனியாக இருக்கும், நீதிபதிக்கு எதிராக அமைக்கப்பட்டிருக்கும், சாட்சி கூண்டு என்று சொல்லப்படுவது நீதிபதி இருக்கைக்கு அருகாமையில் இருக்கும். ஆக நீதிமன்றத்துக்கு சென்று நமது பிரச்சனைக்காக புகாரை கொடுத்து அதற்காக நாம் சாட்சி சொல்வதோ அல்லது பிற வழக்குகளில் நாம் உண்மை என்ன என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்வதற்காக சாட்சியம் அழிப்பதோ நிச்சயம் ஒரு குடிமகனுடைய அடிப்படை கடமையாகும்.
அதற்காக நீதிமன்றத்தில் கூண்டெற வைத்துவிட்டார்கள் என்று தவறாக கருத வேண்டாம். சாட்சி கூண்டெறி சாட்சி சொல்வது தனது வழக்கிற்காகவோ பிற வழக்கிற்காகவோ ஒருவருடைய கடமை என்பதினால் அது தவறேயில்லை. அதேமாதிரி காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக செல்வதும் எந்த விதத்திலும் தவறில்லை. ஆகையினால் எங்களை கோர்ட் படி ஏற வெச்சுட்டாங்க எங்களை போலீஸ் ஸ்டேஷன் வர வெச்சுட்டாங்க என்று யாரும் கவலைப் பட அவசியம் இல்லை.
அது நமது உரிமையே நிலைநாட்டுவதற்காக என்ற வகையில் இருந்தால் காவல் நிலையத்திற்கு செல்வதாலோ அல்லது நீதி மன்றத்துக்கு செல்வதாலோ அது நிச்சயம் தவறான ஒரு விஷயம் இல்லை அது நமது அடிப்படை உரிமையும் கூட அடிப்படை கடைமையும் கூட.
Reviews
Submit your review | |