காசோலை குறித்த புதிய சட்டம்
Please fill-up the form below. Pay Rs. 2,000/- (USD 50) as registration fee
for consultation with Senior Lawyer.
Click for CONTACT FORM
மாற்றாவனமுறைச் சட்டம் என்று சொல்ல படுகிற negotiable instrument act என்று ஆங்கிலத்தில் சொல்கிற சட்டத்தில் என புதியதாக வந்திருக்கிறது என்று பார்க்கப்போகிறோம். சாதாரணமாக cheque என்று சொல்கிற காசோலையை தான் தரவேண்டிய ஒரு தொகைக்காக ஒரு நபர் இன்னொரு நபருக்கு அதாவது யாரிடமிருந்து கடன் பெற்றாரோ அந்த நபருக்கு அந்த காசோலை கொடுத்துவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பணத்தை தரவில்லை என்றால் அந்த காசோலை அவரது வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது போதிய பணம் இல்லை என்றோ, இல்லை வேறு சில காரணங்களுக்காகவோ அந்த காசோலை வங்கியில் காலெக்ஷன் ஆகாமல் திரும்ப வந்துவிட்டால் நிச்சயமாக அது இரண்டு வருடம் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடிய ஒரு குற்றமாக கருதப்படும். அதுமட்டுமில்லாமல் அந்த காசோலையில் என்ன தொகை எழுதப்பட்டிருக்கோ அந்த தொகையில் இரண்டு மடங்கு தொகை அபராதமாக அல்லது இழப்பீடாக நீதிமன்றம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது.
புதிதாக சட்டத்திருத்தம்
இந்த சட்டத்தில் புதிதாக 2018 ஆம் வருடம் என்ன புதிதாக சட்டத்திருத்தம் வந்திருக்கு என்றால், இந்த மாதிரி வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது யார் அந்த காசோலையை வைத்திருக்கிறார்களோ எனக்கு சேர வேண்டிய தொகைக்காக இந்த காசோலையை கொடுத்தார்கள்
ஆனால் எதிரி அந்த பணத்தை கொடுக்காததால் காசோலை திரும்ப வந்துவிட்டது என்று நீதிமன்றத்தில் எதிரி மீது வழக்கு தாக்கல் செய்யும் போது இந்த வழக்கு முடிவதற்கு முன்பே இந்த புதிய சட்டத்தின் படி 20% காசோலை தொகையினை, உதாரணத்துக்கு காசோலை தொகை ரூ1 லட்சமாக இருக்கிற போது ரூ20 ஆயிரத்தை நீங்கள் வழக்கு நடத்துவதற்கு முன்பே எனக்கு இடைக்கால இழப்பீடாக எதிரி தருவதற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கு தாக்கல் செய்த புகார்தாரர் (complainant) ஒரு பெட்டிஷன் கோர்ட்டில் பைல் பண்ணுகிற போது நீதிமன்றம் அந்த காசோலை தொகையினில் 20% இடைக்கால இழப்பீடாக எதிரி புகார்தாரற்கு கொடுக்கவேண்டுமென்று உத்தரவிட இந்த புதிய சட்டத்தில் இடமிருக்கு.
ஆனால் வழக்கு முடியும் போது புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் அதாவது எதிரி விடுதலை செய்யப்பட்டால் அந்த தொகையை எப்போது புகார்தாரற்கு கொடுத்தாரோ அந்த தேதியில் இருந்து வங்கியினுடைய வட்டியின் அடிப்படையில் கணக்கீட்டு அந்த தொகைக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து அந்த புகார்தாரர் எதிரிக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதற்கும் இந்த புதிய சட்டத்தில் இடம் இருக்கு.
அதுமட்டுமில்லாமல் மேல்முறையீடு நடக்கிறபொழுது எந்த மாதிரி உத்தரவு வந்தாலும் யார் மேல்முறையீடு செய்திருந்தாலும் மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறபோது அது முடிவதற்கு முன்பே 20% காசோலைத் தொகையினை எதிரி இடைக்கால இழப்பீடாக கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கு புகார்தாரற்கு உரிமை இருக்கு. காசோலையை ஒருவருக்கு கொடுப்பதற்கு முன்பு வங்கியில் போதிய பணம் இருக்கிறதா, தான் தரவேண்டியத் தொகைக்குத் தான் காசோலையை தருகிறோமா என்று எல்லா விஷயத்தையும் யோசித்து மிகவும் கவுனமாக கையாளவேண்டிய ஒரு ஆவணம் cheque என்று சொல்கிற காசோலை.
Reviews
Submit your review | |